தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சீரற்ற காலநிலையால் மரக்கறி விலையில் திடீர் மாற்றம்…

0 25

கடந்த நாட்களில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக தங்களது விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மரக்கறிகளின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் ஒரு கிலோகிராம் போஞ்சி 600 ரூபாவுக்கும், கரட் ஒரு கிலோ 400 ரூபாவுக்கும், ஒரு கிலோகிராம் கறிமிளகாய் 800 ரூபாவுக்கும் கத்தரிக்காய் ஒரு கிலோகிராம் 400 ரூபா வரை அதிகரித்துள்ளதாகவும், வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேநேரம் வெள்ளரிக்காய், பீர்க்கங்காய் மற்றும் மரவள்ளிக்கிழங்கு என்பவற்றின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த நிலைமை காரணமாக விவசாயிகளுடன், சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகள் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகிறது

Leave A Reply

Your email address will not be published.