Developed by - Tamilosai
சீரற்ற காலநிலை காரணமாக பிரதான புகையிரத பாதையில், புகையிரத சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து ரம்புக்கணை வரையும், கொழும்பு கோட்டையிலிருந்து சிலாபம் வரையுமான பிரதான புகையிரத பாதையில் புகையிரத சேவைகள் இடம்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மலையக புகையிரத சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.