தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சீரற்ற காலநிலையால் நால்வர் பலி!

0 84

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் நால்வர் உயிரிழந்தனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 27 ஆம் திகதி முதல் நேற்று வரையான காலப்பகுதியில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன.

கேகாலை, முல்லைத்தீவு, பதுளை மற்றும் புத்தளம் பகுதிகளில் இவ்வாறு மரணங்கள் பதிவாகியுள்ளன.

அத்துடன் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் ஆறாயிரத்து 34 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.