Developed by - Tamilosai
நேற்று நள்ளிரவு முதல் 50 கிலோ கிராம் சீமெந்து பொதியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சீமெந்து கம்பனிகள் தெரிவித்திருந்தன.
இதனடிப்படையில் சீமெந்து பொதி ஒன்றின் புதிய விலை 1,375 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் டோக்கியோ சீமெந்து நிறுவனம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு தங்களது விலை தொடர்பான நிலைப்பாட்டினை தெரிவித்துள்ளனர்.
குறித்த அறிக்கையில், டோக்கியோ சீமெந்து நிறுவனத்தால் டோக்கியோ சுப்பர் மற்றும் நிபொன் சீமெந்து வர்த்தக நாமங்களில் சந்தைப்படுத்தப்படும் 50 கிலோ கிராம் சீமெந்து பொதி ஒன்றின் அதி உச்ச சில்லறை விலை 1,275 ரூபா ஆக மாத்திரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.