Developed by - Tamilosai
இலங்கைக்கான சீன தூதுவர் ஸி சென்ஹொங் இன்று(15) வட மாகாணத்திற்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார்.
இதன்போது, அவர் பல்வேறு முக்கிய சந்திப்புக்களை மேற்கொள்ள உள்ளார்.
வடக்கில் உள்ள மூன்று தீவுகளில் சூரிய சக்தி மின்னுற்பத்தி நிலையத்தை அமைக்கும் வேலைத் திட்டத்தை இடைநிறுத்துவதாக இந்த மாத ஆரம்பத்தில் சீனா அறிவித்திருந்தது.
இந்த வேலைத்திட்டம் சம்பந்தமாக மூன்றாம் தரப்பு ஒன்றிலிருந்து எழுந்துள்ள பாதுகாப்பு கரிசனை கருதி, அது இடைநிறுத்தப்படுவதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், சீன தூதுவரின் வடக்கு விஜயம் அமைகின்றது.