தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சீன கம்பனிக்கு கொடுப்பனவு செலுத்த 30 ஆம் திகதி வரை தடை!

0 152

நாணய கடித அடிப்படையில் சீன உர நிறுவனத்திற்கு கொடுப்பனவு செலுத்த, விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவை நவம்பர் 30 ஆம் திகதி வரை நீடிக்க கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

இவ் உத்தரவு காரணமாக தொடர்ந்து சீன உர நிறுவனத்துக்கு கொடுப்பனவை கொடுக்கமுடியாத சூழல் மக்கள் வங்கிக்கு ஏற்பட்டிருக்கின்றது. கடந்தமுறை நீதிமன்ற தடைகாரணமாக கொடுப்பனவை கொடுக்காததன் மூலம் சீன தூதரகம் மக்கள் வங்கியை கறுப்பு பட்டியலில் சேர்த்தது.

சீன உரத்தினை மூன்றாவது முறை பரீசிலனை செய்வதற்கு கொழும்பு சீன தூதரகம் முழுமுயற்சிகளையும் மேற்கொண்டுவருகின்றது. எனினும் இலங்கை விவசாய அமைச்சு அதற்கு சாத்தியம் இல்லை என்று தொடர்ந்து எதிர்ப்பு வெளியிட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.