தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சீன உரம் குறித்து உரிய பரிசோதனைகளை முன்னெடுக்காது வங்கிக் கணக்கினை எவ்வாறு ஆரம்பிக்க முடியும்?

0 93

சீன இரசாயன உரக் கப்பல் மீண்டும் வருகை தந்துள்ளமையே நாட்டினுள் காணப்படும் பிரச்சினையாகும். உரத்தின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதன் முடிவுகள் வெளியாக முன்னர் கொடுப்பனவுக்கான வங்கிக் கணக்கினை யார் ஆரம்பித்தது? என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க கேள்வியெழுப்பியுள்ளார்.

முறையான பரிசோதனைகளை முன்னெடுக்காது எவ்வாறு  வங்கிக் கணக்கினை ஆரம்பிக்க முடியும் என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே  அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:

விவசாயத்துறை அமைச்சர் மற்றும் விவசாய இராஜாங்க அமைச்சர் ஆகியோருடன் இது தொடர்பில் நாம் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளோம்.

சுதந்திரக் கட்சி ஆட்சி செய்த அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் விவசாயிகளுக்கு முன்னுரிமையளித்து நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்கும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. எவ்வாறிருப்பினும் இதனை நடைமுறைப்படுத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் பல காணப்படுகின்றன.

சீன இரசாயன உரக் கப்பல் மீண்டும் வருகை தந்துள்ளமையெ நாட்டினுள் காணப்படும் பிரச்சினையாகும். உரத்தின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதன் முடிவுகள் வெளியாக முன்னர் கொடுப்பனவுக்கான வங்கிக் கணக்கினை யார் ஆரம்பித்தது? முறையான பரிசோதனைகளை முன்னெடுக்காது எவ்வாறு எம்மால் வங்கிக் கணக்கினை  ஆரம்பிக்க முடியும்?

இதனை நாம் செய்து விட்டு சீனாவின் மீது குற்றம்சுமத்த முடியாது. பரிசோதனை நிறைவடைய முன்னர் வங்கிக் கணக்கு ஆரம்பிக்கப்பட்டமை பிரச்சினைக்குரியதாகும்.  

வங்கிக் கணக்கினை ஆரம்பித்த பின்னர் நிராகரித்தால் சீன நிறுவனம் மாத்திரமல்ல. எந்த நிறுவனமானாலும் எம்மிடமே கேள்வியெழுப்பும்  என  அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.