Developed by - Tamilosai
அபாயகரமான பக்டீரியா அடங்கிய உரத்தை நாட்டுக்கு அனுப்பிய சீன நிறுவனம் வேறு உரத் தொகையை இலங்கைக்கு அனுப்புவதற்குத் தயாராகின்றமை தொடர்பில் வாரஇறுதி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே குறித்த நிறுவனத்தின் புதிய உரத்தொகையை கொள்வனவு செய்வதற்கான யோசனையை முன்வைப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் அபாயகரமான பக்டீரியா அடங்கியதாக உறுதி செய்யப்பட்ட உரத் தொகையைப் பெற்றுக் கொள்வதற்கு தயாரில்லை என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
அத்துடன் சர்ச்சைக்குரிய உரத்தை மீளப் பெற்றுக் கொள்வதற்கும் பரிசோதனைகளின் பின்னர் புதிய உரத்தை வழங்குவதற்கும் சீன நிறுவனம் இணங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாட்டிற்குள் உரத்தொகை ஏற்றுக்கொள்ளப்படுமா? என்பது தொடர்பில் விவசாய பணிப்பாளர் நாயகத்தினால் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.