தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சீனா 2030 ஆம் ஆண்டுக்குள் 1,000 அணு ஆயுதங்களை வைத்திருக்கும்

0 78

சீனாவின் இராணுவப் பலம் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்பு முன்னேற்றங்கள் குறித்து அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் தலைமையகமான பென்டகன் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

 தாய்வான் விடயத்தில் சீனாவின் நோக்கங்கள் குறித்து தாங்கள் அதிக எச்சரிக்கையுடன் இருப்பதாக அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாய்வானை கட்டுப்பாட்டில் கொண்டு வரும் சீனாவின் நோக்கங்கள் பற்றிய புதிய எச்சரிக்கைகள் மற்றும் அணுசக்தி திறன் கொண்ட ஹைபர்சோனிக் ஏவுகணைகள் சோதனை என தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில், அமெரிக்கா இந்த புதிய மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், ஒரு வருடத்திற்கு முன்பு அமெரிக்க அதிகாரிகள் கணித்ததை விட சீனா தனது அணுசக்தியை மிக வேகமாக அதிகரித்து வருகிறது என எச்சரிக்கப்பட்டுள்ளது. சீனா கடந்த ஆண்டு 200 அணு ஆயுதங்களை வைத்திருந்ததாக மதிப்பிடப்பட்டது.

ஆனால் தொடர்ந்து அணு ஆயுதங்களை பெருக்கி வருவதால், அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 6 ஆண்டுகளுக்குள் 700 ஆக அதிகரிக்கலாம். 2030 இற்குள் 1,000 ஆக உயரலாம்’ என அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. 

அடுத்த 10 ஆண்டுகளில் சீனாவின் அணு ஆயுதங்கள் 5 மடங்கு அதிகரிக்கும் என்றும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.