Developed by - Tamilosai
தைவான் மீது தாக்குதல் நடத்த இராணுவம் தயாராக உள்ளதாக சீன அதிபர் Xi Jinping பேசும் ஒலிப்பதிவு வௌியாகியுள்ளது.
தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என்று சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது.
தென்சீன கடல் பகுதியில் சீனா போர்ப்பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிற நிலையில், தைவானை அச்சுறுத்தும் விதமாக அந்நாட்டு வான் எல்லைக்குள் சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்து வருகின்றன.
சீனா, விடுத்துள்ள எச்சரிக்கையானது தேவை ஏற்பட்டால் தைவான் மீது இராணுவ பலத்தை பயன்படுத்த தயங்க மாட்டோம்.
அந்த ஒலிப்பதிவில், 1. 40 இலட்சம் வீரர்கள், 953 கப்பல்கள் 1,653 ஆளில்லாமல் இயங்கும் கருவிகள், 20 விமான நிலையங்கள், 6 கப்பல் கட்டுதல் மற்றும் பழுது நீக்கல் நிலையங்கள், 14 அவசரகால பரிமாற்ற மையங்கள், உணவு தானிய கிடங்குகள், மருத்துவ நிலையங்கள், இரத்த சேகரிப்பு நிலையங்கள், எரிபொருள் கிடங்குகள், எரிவாயு நிரப்பும் நிலையங்களை தயார்படுத்துவது குறித்து சீன அதிபர் கூறியுள்ளார்.