தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சீனாவில் 133 பயணிகளுடன் பயணித்த விமானம் விபத்து

0 504

சீனா ஈஸ்டர்ன் எயார்லைன்ஸிற்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

133 பேருடன் பயணித்த குறித்த விமானம் தெற்கு சீனாவின் மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குன்மிங் நகரிலிருந்து குவாங்சோவுக்கு பறந்து கொண்டிருந்த போது குவாங்சி மாகாணத்தில் உள்ள மலையில் விழுந்து விபத்துக்குள்ளானது என சீன அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

விபத்து நடந்த இடத்திற்கு அருகில் மீட்புக் குழுக்கள் அனுப்பட்டுள்ள போதும் உயிரிழப்புகள் மற்றும் சேதம் குறித்து இதுவரை தெரிவிக்கப்படவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.