Developed by - Tamilosai
தென்மேற்கு சீனாவின் மலைப்பகுதியான குய்சோவ் மாகாணத்தில் நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து நேற்று அதிகாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன், 20 பேர் படுகாயமடைந்தனர் என குய்சோவ் மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாகாண தலைநகரான குயாங்கிற்கு தென்கிழக்கே 170 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள சாண்டு பகுதியில் இந்த விபத்து நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் சிக்கிய பேருந்தில் 47 பேர் பயணித்தனர் எனவும், காயமடைந்த 20 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.