Developed by - Tamilosai
இன்று மேற்கு சீனாவின் மலைப்பகுதியான சிச்சுவான் மாகாணத்தில் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இரண்டாவது நிலநடுக்கமானது அடுத்த 40 நிமிடங்களில் யான் நகரில் உணரப்பட்டுள்ளது.அந்த நிலநடுக்கம் 4.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதையடுத்து 46 பேர் உயிரிழந்துள்ளதுடன் 16 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நூற்றுக்கணக்கான மீட்புப் பணியாளர்கள் நிலநடுக்க மையத்திற்கு அனுப்பப்பட்டனர், எனவும் மீட்புப் பணியாளர்களுக்கு உதவ 1000க்கும் மேற்பட்ட வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக சிச்சுவான் நில அதிர்வு ஆணையம் மேலும் தெரிவித்துள்ளது.