Developed by - Tamilosai
ஆபத்தான( பக்றீரியா) நுண்ணுயிர்கள் உள்ளடங்கியதாக உறுதிசெய்யப்பட்ட கரிம உரத்தை பலவந்தமாக இலங்கைக்கு வழங்கும் சீன நிறுவனத்தின் முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி வலியுறுத்தியுள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஜே.வி.பியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சீனாவிலிருந்து வரும் கப்பலை துறைமுகத்திற்குள் நுழைய அனுமதிக்க வேண்டாம் என துறைமுக ஆணையகத் தலைவருக்கு விவசாய அமைச்சின் பணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.