Developed by - Tamilosai
இலங்கையில் எந்த அரசாங்கம் ஆட்சி நடத்தினாலும் தமது ஆதரவு தொடரபும் என்று இலங்கைக்கான சீன தூதுவர் கி சென்ஹொங் அறிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,
கடன் மறுசீரமைப்பு விடயம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதற்கான இலங்கையின் முடிவானது, இலங்கைக்கான 2.5 பில்லியன் டொலர் சீன உதவி தொடர்பான பேச்சுவார்த்தைகளை தாமதப்படுத்தியுள்ளது.
சீனா கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் 2022 ஜனவரி மாதம் வரை 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான 730,000 மெட்ரிக் தொன் எரிபொருளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு வழங்கியுள்ளது.
இதற்காக, மொத்தம் 12 கப்பல்களுக்கான கட்டணமாக, 390 மில்லியன் டொலர்களை இலங்கை செலுத்த வேண்டியுள்ளது. இந்த நிலையில், அதில் 7 கப்பல்களுக்கு மாத்திரம் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை எந்தவொரு அரசாங்கத்தின் கீழும் சீனாவின் ஆதரவு தொடரும். சீனா, இலங்கை மக்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும். அந்த ஆதரவானது ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி அல்லது பிராந்தியத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை என்றார்.