Developed by - Tamilosai
அமெரிக்கப் படை வீரர்கள் தாய்வானில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக, தாய்வான் ஜனாதிபதி சாய் இங்க் வென் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் சி.என்.என். ஊடகத்துக்கு அளித்த சிறப்பு செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தாய்வானில், 2 கோடியே 30 இலட்சம் மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும், ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், தங்களுக்குத் தேவையான சுதந்திரத்தை உறுதி செய்யவும் ஒவ்வொரு நாளும் கடினமாக முயற்சித்து வருகின்றனர்.
சீனாவிடமிருந்து ஒவ்வொரு நாளும் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது.
இதனால், அமெரிக்கப் படையினர் தாய்வானில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்கா எங்களுக்கு பரந்தளவிலான ஒத்துழைப்பை அளித்து வருகிறது. இதன் நோக்கம் எங்கள் இராணுவ திறனை அதிகரிப்பதுதான்.
தாய்வான் ஜனநாயகத்தின் கலங்கரை விளக்கமாகும்.
உலக அளவில் நம்பிக்கையை நிலைநிறுத்துவதற்கு, ஜனநாயக மதிப்பீடுகள் நிலை நிறுத்தப்படுவதற்கு தாய்வான் பாதுகாக்கப்பட வேண்டும்’ என அவர் கூறினார்.
இதேவேளை, சீனா மூலம் அச்சுறுத்தல் வரும் பட்சத்தில் தாய்வானுக்கு அமெரிக்கா எப்போதும் துணை நிற்கும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.