தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சீனாவினால் இலங்கைக்கு தொடர இருக்கும் மற்றுமொரு நெருக்கடி!

0 143

இலங்கை தொடர்பில் பல்வேறு சர்வதேச நிறுவனங்களில் முறைப்பாடு செய்ய சீன நிறுவனம் ஒன்று திட்டமிட்டுள்ளது.
முக்கியமாக சேதன பசளை இறக்குமதி தொடர்பில் முரண்பாட்டு நிலை உருவாக்கியுள்ள சீன உர நிறுவனம் இலங்கை மீதான அழுத்தங்களை கொடுத்துள்ளது.
மிகப் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு நாடு முகம் கொடுத்துவரும் நிலையில் குறித்த சீன நிறுவனம் இலங்கையிடமிருந்து நட்டஈடு பெற்றுக்கொள்வதற்கானநடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
ஏற்கெனவே சீனாவின்Seawin Biotech நிறுவனத்திற்கு உர இறக்குமதி குறித்தான முரண்பாட்டை தொடர்ந்து 6.7 மில்லியன் டொலர்களை நட்டஈடாக வழங்கத் தீர்மானித்துள்ள நிலையில்
தமது நிறுவனத்தின் நற்பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தினை ஈடு செய்யுமாறு இலங்கைக்கு எதிராக சீன நிறுவனம் முறைப்பாடு செய்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.