தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சிவகார்த்திகேயன் படத்தில் விஜய் சேதுபதி?

0 74

தமிழ் சினிமாவில் மற்ற நடிகர்களுடன் நட்புடன் பழகும் நடிகர்களில் விஜய் சேதுபதியும் ஒருவர். மற்ற நட்சத்திரங்களுடன் திரையை பகிர்ந்து கொள்வதில் அவர் எப்போதும் தயாராக இருக்கிறார். இதற்கிடையே சமீபத்தில் தேசிய விருது அறிவிக்கப்பட்ட மடோனா அஸ்வினுடன் சிவகார்த்திகேயன், மாவீரன் என்ற படத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர்கள் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, நடிகர் விஜய் சேதுபதியை அணுகியதாக கூறப்படுகிறது. பிஸியான அவர் இன்னும் பதிலளிக்கவில்லை. ஆகையால், தற்போதைக்கு ‘மாவீரன்’ படத்தில் சிவகார்த்திகேயனுடன், விஜய் சேதுபதி நடிக்கிறாரா என்பது விடை தெரியாத கேள்வி.

விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் திரை போட்டியாளர்கள் என ரசிகர்கள் கருதுவதால், ‘மாவீரன்’ படத்தில் அவர்கள் இணைந்து நடிக்கும் பட்சத்தில் அது மிகப்பெரிய படமாக மாறும். இந்தப் படத்தின் மூலம் கவுண்டமணி மீண்டும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கியாரா அத்வானி ஹீரோயினாக நடிப்பதாகவும், மிஷ்கின் வில்லனாக நடிப்பதாகவும் கூறப்படும் நிலையில், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.