Developed by - Tamilosai
சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் கடந்த மே 13ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி இருந்தது. மக்கள் மத்தியில் படத்திற்கான விமர்சனங்களும் ஆதரவுகளும் அதிகமாகவே காணப்பட்டன.
தற்போது படம் உலகம் முழுவதும் வெளியாகி 12 நாள் முடிவில் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது படக்குழுவினருக்கு பாரிய சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகார்த்திகேயன் சினிமா பயணத்திலும் இப்படம் வெற்றிப் படமாக அமைந்துவிட்டது.