தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சிலாபம் பகுதியில் நகைகளை திருடிய பணிப்பெண்!

0 14

சிலாபம் பகுதியில் ஓய்வுபெற்ற பொறியியலாளரின் வீட்டிலிருந்து சுமார் 14 இலட்சம் தங்க நகைகளை திருடிய இருவரை சிலாபம் தலைமையக பொலிஸ் குற்றப்புலானாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

குறித்த வீட்டில் பணிப்புரிந்து வந்த பெண்ணொருவரும், நகைகளை திருடி விற்பனை செய்ய உதவி புரிந்த நபருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான இருவரும் சிலாபம்-லங்சியாவத்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டில் பணிபுரியும் போது, ​​தங்க ஆபரணங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களை அவதானித்துள்ள சந்தேகநபர், இரண்டு தடவைகளில் 14 இலட்சம் பெறுமதியான தங்க ஆபரணங்களை திருடியது விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

அதற்கமைய, பிரதான சந்தேகநபரான பணிப்பெண் மற்றும் அவருக்கு உதவிய நபரையும் எதிர்வரும் 17ஆம் திகதி சிலாபம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.