Developed by - Tamilosai
சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளைப் பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் குறித்து சிறைச்சாலை திணைக்களம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து சிறைச்சாலைகளின் பதில் ஆணையாளரும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளருமான சந்தன ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி வாரத்தில் இரண்டு நாட்கள், சிறைக்கைதிகளைப் பார்வையிட அவர்களின் உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.