Developed by - Tamilosai
சிறுவர்கள் வீடுகளுக்குள்ளேயே முடக்கப்பட்ட காரணத்தால் சில மனநோய் நிலைமைகளுக்கு உள்ளாகும் நிலை அதிகரித்துள்ளதாக கொழும்பு ரிஜ்வே வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதனால் வீடுகளில் சிறுவர்களுக்கு உகந்த சூழல் ஒன்றை உருவாக்க பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு மனநிலைகளில் இருந்து சிறுவர்களைப் பாதுகாக்க அவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புவது அத்தியாவசியம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.