Developed by - Tamilosai
கல்முனைப் பிரதேசத்தில் ஓர் வகை வைரஸ் பரவி வருவதோடு தொண்டை வலி, காய்ச்சல் தடிமன், இருமல் போன்றவற்றால் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக அரச மருத்துவமனைகளில் வெளி நோயாளர் பிரிவுகளில் சிறுவர்கள் அதிகளவு சிகிச்சைப் பெற வருகை தருகின்றனர்.
கல்முனை பிரதேசத்திலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களில் நோயைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னேற்பாடுகள் சுகாதார வைத்திய அதிகாரிகளால் மேற்கொள்ளப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.