Developed by - Tamilosai
இந்த நாட்களில் கொழும்பிலும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களிலும் காய்ச்சலால் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.
குறிப்பாக பாடசாலை மாணவர்கள் மற்றும் முன்பள்ளி சிறுவர்கள் மத்தியில் இந்த அறிகுறிகள் அதிகமாக காணப்படுவதாக சிறுவர் வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
குழந்தைக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால், இயற்கையான திரவ உணவு மற்றும் ஓய்வு கொடுப்பதன் மூலம் நோயாளி விரைவில் குணமடையலாம் எனவும், குறிப்பிட்ட அளவிலேயே பாராசிட்டமால் மருந்தை வழங்க வேண்டும் எனவும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.
எனவே இது குறித்து விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. சமூக இடைவெளி, கை கழுவுதல் போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். வகுப்பில் குழந்தைகள் முகக்கவசம் அணிவது நல்லது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.