Developed by - Tamilosai
வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்அட்டுலுகம பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட 9 வயது சிறுமி ஆயிஷாவிற்கு நீதி கோரி நாளைய தினம் காலை 10 மணிக்கு போராட்டம் இடம்பெறவுள்ளது. நாளைய தினம் 8 மாவட்டங்களில் போராட்டம் இடம் பெறவுள்ளது.
தொடர்சியாக நாட்டில் இடம் பெறும் சிறுவர் துஸ்பிரயோகம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கவும் அவ்வாறான செயற்பாடுகளால் பாதிக்கப்படும் பெண்கள் சிறுவர்களுக்கு விரைவில் நீதி நிலை நாட்டபடவேண்டும் என்றும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள பெண்கள் வலையமைப்பினர், சமூக ஆர்வலர் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டத்தில் பொது மக்களும் ஒன்றினையுமாறு பெண்கள் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.