Developed by - Tamilosai
இறந்தவர்களின் ஆன்மாவை மதிக்காதவரையில் இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படாதெனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.
அதேநேரம் 2009ஆம் ஆண்டுக்குப் பின்னரே, வடக்கிற்குப் போதைப் பொருட்கள் அறிமுகமானதாகவும் அவர் கூறினார்.
இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எழுந்து பதிலளிக்க முற்பட்டபோது அவரது ஒலிவாங்கி செயற்பட்டிருக்கவில்லை.
இதனையடுத்து எழுந்த சபை முதல்வர் தினேஸ் குணவர்தன, பாரிய குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ள வேளையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதற்குப் பதில் வழங்க உரித்துடையவர் எனவும் தற்போது குழுநிலை விவாதம் இடம்பெறும் நிலையில் அந்த விதிகளே அமுலில் இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.
இதன்பின்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன் மற்றும் குலசிங்கம் திலீபன் ஆகியோருக்கு இடையில் வாதம் இடம்பெற்றது.