தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சிறிதரனுக்கு எதிராக வவுனியாவில் போராட்டம்

0 132

வவுனியாவில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு எதிராக இன்றைய தினம் சனிக்கிழமை  ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்றில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான ராஜமாணிக்கம் சாணக்கியனின் பெயரை , ஈழமக்கள் ஜனநாயக கட்சியின்  நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் “முஹமது சாணக்கியன்” என விளித்து பேசினார். 

அதன் போது , தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் , சக நாடாளுமன்ற உறுப்பினர்  சாணக்கியனின் பெயருக்கு முன்னால் “முஹமது” என விளித்தமைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் , அதனை ஹன்சால்டில் இருந்து நீக்குமாறும் கோரி இருந்தார். 

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் கு. திலீபனை ” படிப்பறிவில்லாதவர்கள் போல” என தொனிப்பட கருத்தும் தெரிவித்து இருந்தார். 

இந்நிலையிலையே , இன்றைய தினம் வவுனியாவில் நாடாளுமன்ற உறுப்பினர் திலீபனின் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனுக்கு எதிராக ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டனர். 

Leave A Reply

Your email address will not be published.