Developed by - Tamilosai
சிரேஷ்ட ஊடகவியலாளர் ம.வ.கானமயில்நாதன் தமது 79ஆவது வயதில் இன்று(22) அதிகாலை யாழ்ப்பாணத்தில் காலமானார்.
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ம.வ. கானமயில்நாதன் 1942ஆம் ஆண்டு யூலை மாதம் 25ஆம் திகதி பிறந்தார்.
1985ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உதயன் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல், 36 வருடங்கள் பிரதம ஆசிரியராக கடமையாற்றியுள்ளார்.
பெரிஸில் 2013ஆம் ஆண்டு எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் தன்னார்வ அமைப்பின் விருது வழங்கும் விழாவில், அவர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
அவரது இறுதிகிரியை நாளை(23) முற்பகல் 10 மணியளவில் யாழ்ப்பாணம் கோம்பையன் மயானத்தில் இடம்பெறும்.