தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சிரியாவில் ஐந்து மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து இதுவரை 11 பேர் பலி

0 34

நேற்று சிரியாவின் வடக்கு நகரமான அலெப்போவில் ட்டவிரோதமாக கட்டப்பட்ட ஐந்து மாடிக் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், இடிபாடுகளில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.

மூன்று குழந்தைகள் உட்பட 11 பேர் வரை உயிரிழந்த நிலையில், இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கக் கூடும் என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

தகவலறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர், இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.