தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சிம்புவுக்கு வாழ்த்து தெரிவித்த சூர்யா

0 44

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ளது. ஏற்கனவே இந்த மூவர் கூட்டணியில் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படங்களின் வரவேற்பை தொடர்ந்து ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் மீதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தில் சித்தி இத்தானி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் இன்று தமிழகம் முழுவதும் 600-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் இதனை விழாக்கோலமாக கொண்டாடி வருகின்றனர்.

இதனிடையே திரைபிரபலங்கள் பலரும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் சூர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “படத்தை பற்றி நல்ல செய்திகளை கேள்வி படுகிறேன். படம் பார்க்க காத்திருக்கிறேன். படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து சிம்பு, சூர்யாவின் வாழ்த்துக்கு, “மிக்க நன்றி அண்ணா” என்று பதிவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.