Developed by - Tamilosai
சூர்யா தனது 25 ஆண்டு கால திரைப் பயணத்தில் சீரான இடைவெளியில் சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்து தனக்கென மிகப்பெரும் ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியுள்ளார்.
சூர்யா அறிமுகமான நேருக்கு நேர் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. இந்த படத்தை பிரபல இயக்குனர் வசந்த் இயக்க, மணிரத்னமின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் படத்தை தயாரித்திருந்தது.
நடிப்பின் நாயகன் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சூர்யா, சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.