தமிழ் ஓசை
தமிழ் ஓசை

“சிங்கள ராவய“ இனவாதக்கட்சி அல்ல – அக்மீமன தயாரட்ன தேரர்

0 150

“சிங்கள ராவய“ இனவாதக்கட்சி அல்ல என்று அந்தக்கட்சியின் தலைவா் அக்மீமன தயாரட்ன தேரர் தொிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது உரையாற்றிய அவர், தமது கட்சி, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுடன் இணைந்து நாட்டை முன்னிலைப்படுத்தி செயற்படுவதாக குறிப்பிட்டார்.

மாவில் ஆறு பிரச்சனையின்போது முஸ்லிம் மக்கள் தம்முடன் இணைந்திருந்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினா் ரிசாத் பதியூதீன் வீட்டில் தமிழ் யுவதி இறந்தபோது தமது கட்சியே முன்னின்று செயற்பட்டதாக அவா் தெரிவித்தார்.

இதேவேளை இன்று நாட்டில் அனைத்துப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், உண்மை நிலைமை தொடர்பில், அமைச்சர்கள் ஒருவருக்கு ஒருவர் முரண்பட்டக் கருத்துக்களை வெளியிட்டு வருவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்தநிலையில் சப்புகஸ்கந்த எாிபொருள் சுத்திகரிப்பு நிலையம், மூடப்பட்டமை தொடா்பில் கேள்வி எழுப்பிய அக்மீமன தயாரத்ன தேரர், அது நிரந்தரமாக மூடப்படுகிறதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

சப்புகஸ்கந்த எாிபொருள் நிறுவனம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படப்போகிறதா? என்பதை அரசாங்கம் மக்களுக்கு வெளி்ப்படுத்தவேண்டும் என்றும் அவர் கோாிக்கை விடுத்துள்ளார்.  

Leave A Reply

Your email address will not be published.