தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சிங்கப்பூரிலிருந்து எரிபொருள் இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

0 153

அடுத்த ஆண்டு தை மாதம் முதல் 8 மாத காலத்திற்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான நீண்ட கால ஒப்பந்தம் சிங்கப்பூர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

1,341,000+10/-5% பீப்பாய்கள் பெற்றோல் (92 Unl) மற்றும் 459,000+10/-5% பீப்பாய்கள் பெற்றோல் (95 Unl) இறக்குமதி செய்வதற்கான நீண்ட கால ஒப்பந்தத்திற்காக இலங்கை பெட்ரோலியம் கூட்டுத்தாபனத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களிடம் ஏலம் கோரப்பட்டது.

அதன்படி, அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட விசேட தரக் கொள்வனவுக் குழுவின் சிபாரிசுக்கு அமைவாக குறித்த நிறுவனத்திற்கு உரிய ஒப்பந்தத்தை வழங்குவதற்கு எரிசக்தி அமைச்சரால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதேவேளை 1,137,500+10/-5% பீப்பாய்கள் டீசல் (அதிகபட்ச சல்பர் சதவீதம் 0.05) மற்றும் 262,500+10/-5% பீப்பாய்கள் டீசல் (அதிகபட்சம் 01 சதவீதம்) இறக்குமதி செய்வதற்கான நீண்ட கால ஒப்பந்தத்திற்கான ஏலமும் கோரப்பட்டது.

இதற்கான ஒப்பந்தமும் சிங்கப்பூர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.