தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சிக்கனமாக பயன்படுத்தாவிட்டால் மூன்று மாதங்களுக்கு மின்வெட்டு தொடரும்

0 242

” பொது மக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தாவிட்டால் மூன்று மாதங்களுக்கு மின்வெட்டு தொடரும்.” – என்று பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” எதிர்வரும் பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது.

எனவே, பொதுமக்கள் சிக்கனமாக மின்சாரத்தை உபயோகித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்படும்.

எனவே, மாலை 6 மணி முதல் 10 மணிவரை ஈட்டர், ஒசின் மெசின், ஏசி, அயன் ஆகியவற்றை பாவிப்பதை தவிர்த்துக்கொள்ளவும்.

வர்த்தக நிலையங்களின் பெயர் பலகை இரவுவரை காட்சிப்படுத்தப்படுகின்றது. இது தவிர்க்கப்பட வேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.