தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சார்ள்ஸ் வௌியிட்ட வர்த்தமானியை இரத்து செய்த ஜீவன்

0 89

மன்னார் பிரதேச சபை தவிசாளரை பதவியிலிருந்து நீக்குவதற்கு வடமாகாண முன்னாள் ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் வௌியிட்ட வர்த்தமானி அறிவிப்பை இரத்து செய்வதற்கு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா நடவடிக்கை எடுத்துள்ளார்.

மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் சாஹுல் ஹமீட் மொஹமட் முஜாஹிர் தொடர்பில் ஓய்வுபெற்ற நீதிமன்ற அதிகாரி கந்தையா அரியநாயகத்தால் முன்னெடுக்கப்பட்ட விசாரணை முடிவின் அடிப்படையில் அவரை  பதவியில் இருந்தும் உறுப்பினர் பதிவியில் இருந்தும் நீக்க முன்னாள் ஆளுநர் நடவடிக்கை எடுத்திருந்தார்.

செப்ரெம்பர் 14 ஆம் திகதி முதல் அவரைப் பதவியில் இருந்து நீக்குவதற்காக செப்ரெம்பர் மாதம் 13 ஆம் திகதி வர்த்தமானி அறிவிப்பு வௌியிடப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் புதிய ஆளுநரின் அதிகாரத்தின் அடிப்படையில் குறித்த வர்த்தமானி அறிவிப்பை இரத்து செய்துள்ளார்.

நவம்பர் 9 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த வர்த்தமானி அறிவிப்பு இரத்து செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.