Developed by - Tamilosai
நபர் ஒருவரால் மேற்கொள்ளப்படும் தவறுகளுக்கு அமைய மதிப்பீடுகளை குறைத்து அவர்களின் சாரதி அனுமதிப்பத்திரத்தை ரத்து செய்வது தொடர்பான நடவடிக்கை தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
இது தொடர்பில் நாடாளுமன்றில் நேற்று (04) கருத்துரைத்த அவர், குறித்த திட்டத்தின் மேலதிக செயற்பாடுகள் காவல்துறையினரின் வசமுள்ளதாக குறிப்பிட்டார்.
முச்சக்கரவண்டிகளை அலங்கரிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும் அது தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதே போன்று ஏனைய வாகனங்களையும் அலங்கரிப்பதற்கான அனுமதியை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
விபத்துக்களை மட்டுப்படுத்துவதற்காக மதிப்பீடுகளை குறைக்கக்கூடிய சாரதி அனுமதிப்பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சாரதி அனுமதிப்பத்திர விநியோகத்தின்போது போதைப்பொருள் தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய 4 போதைப்பொருட்கள் தொடர்பில் இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்