Developed by - Tamilosai
எதிர்வரும் 17ஆம் திகதி கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் முதற்கட்ட விடைத்தாள் திருத்தப்பணிகள் ஆரம்பமாகவுள்ளன. இப்பணி எதிர்வரும் 26ஆம் திகதி வரையில் மேற்கொள்ளப்படவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.
மேலும் இரண்டாம் கட்ட விடைத்தாள் திருத்தப்பணிகள் எதிர்வரும் 30ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 9ஆம் திகதிவரை நடைபெற உள்ளதாக குறிப்பிட்டார்.
86 பாடசாலைகளில் 106 நிலையங்களின் ஊடாக திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்படும்.