தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சாணக்கியனையும் சுமந்திரனையும் வன்முறையாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும் -துரைரெட்னம்

0 361

சாணக்கியனும் சுமந்திரனும் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் என்பதை வெளிநாட்டிலுள்ள சில வன்முறையாளர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெட்னம் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் அவருடைய வீட்டில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே அவர் இதனை தெரிவித்துள்ளார்கள்.

புலம்பெயர் மக்களுடன் மக்கள் பிரதிநிதிகள் கலந்தரையாடுவது வழமையான விடயம். புலம்பெயர் மக்களும் பல்வேறு கொள்கை, சித்தாந்தங்களை கொண்டுள்ளவர்கள். அதனால் எதிர்ப்புக்கள், ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்படுவதும் வழமையான விடயம்.

அதுபோலதான் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரனும், இரா.சாணக்கியனும் அங்கு சென்று தங்களுடைய கருத்துக்களை தெரிவிப்பதும் ஜனநாயக கடமைதான். அதனை ஏற்றுக்கொள்வதும், எதிர்ப்பதும் அவர்களது உரிமை.

இவர்களுடைய கருத்து சுகந்திரத்தினை ஏற்று புலம்பெயர் மக்கள் சிலர் இருக்கின்ற போது சிலர் ஏற்றுக்கொள்ளாது இருப்பது ஜனநாயகமற்ற செயற்பாடாகவே இருக்கின்றது.

இவர்கள் தமிழ் மக்களால் வாக்களிக்கப்பட்டு தெரிவு செய்யப்பட்டவர்கள் என்பதனை புலம்பெயர் வன்முறையாளர்களும் புரிந்துகொள்ள வேண்டும் என 

எனினும் குறித்த இரண்டு  நாடாளுமன்ற உறுப்பினர்களும் வடகிழக்கில் மக்களால் வாக்களிக்கப்பட்டு தெரிவுசெய்யப்பட்டவர்கள்.அதனை சிலர் நிராகரிப்பது எந்தளவுக்கு நியாயமானதாகயிருக்கும் என்பது எனது கேள்வியாகும்.இவர்கள் இருவரும் மக்கள் வாக்களித்தே தெரிவுசெய்யப்பட்டவர்கள் என்பதை வெளிநாட்டில் உள்ள சில வன்முறையாளர்கள் இதனை உணர்ந்துகொள்ளவேண்டும் கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெட்னம் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.