தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சாணக்கியனுக்கு கொவிட்-19 தொற்று உறுதி..

0 158

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இது தொடர்பில் தனது ட்விற்றர் கணக்கில் பதிவிட்டுள்ள அவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இன்றையதினம் (20) கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் அதில் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்குள் தன்னை சந்தித்தவர்கள், கொவிட்-19 தொற்று அறிகுறிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன், கொவிட் தொற்று தொடர்பான அறிகுறிகள் கொண்டவர்கள் பரிசோதனைக்கு உட்படுமாறும் அறிவுறுதியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.