Developed by - Tamilosai
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று (29) அலரி மாளிகையில் அபிவிருத்திக்கான சவுதி நிதியத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி சுல்தான் அப்துல்ரஹ்மான் அல்-மர்ஷாட், சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
சவுதி அராபி அரசாங்கம் மற்றும் அபிவிருத்திக்கான சவுதி நிதியம் இலங்கையின் அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்துவதற்கு வழங்கிவரும் ஒத்துழைப்பை நினைவுகூர்ந்த பிரதமர், இருநாட்டு அரசாங்கங்களுக்குமான ஒத்துழைப்பிற்கும், நட்பிற்கும் தனது நன்றியையும் தெரிவித்தார்.
எதிர்கால முன்னுரிமை குறித்து கவனம் செலுத்துகையில் குறிப்பாக கிராமிய பிரதேசங்களின் சிறு நீர்ப்பாசனம்,கிராமிய நீர் வழங்கல் மற்றும் எதிர்கால வீதி அபிவிருத்தி தொடர்பான திட்டங்கள் குறித்து கவனம் செலுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அபிவிருத்திக்கான சவுதி நிதியத்தின் பிரதிநிதிகளிடம் இதன்போது வேண்டுகோள் விடுத்தார்.