Developed by - Tamilosai
40ஆவது அதிகார சபையான பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12ஆவது உறுப்புரையில் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாக நாட்டு மக்களின் நலனுக்காகவே கோட்டாபய ராஜபக்சவினால் விசேட கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய பொது மக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய படையினரை கடமையில் ஈடுபடுத்த கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த விசேட கட்டளை தொடர்பில் சபாநாயகர் சற்றுமுன்னர் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.