Developed by - Tamilosai
சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலுக்கு அவநம்பிக்கை பிரேரணை கையளிப்பு நேரடி தாக்கம் செலுத்தும்
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலுக்கு அவநம்பிக்கை பிரேரணை கையளிப்பு நேரடி தாக்கம் செலுத்தும் என பொருளாதார நிபுணர்கள் முன்வைத்த விடயங்களை கருத்திற் கொண்டு அவநம்பிக்கை பிரேரணையை சபாநாயகரிடம் கையளிப்பதை ஒருவாரம் பிற்போட எதிர்க்கட்சி தயாராகியுள்ளது.
அரசாங்கத்திற்கும் அரச தலைவருக்கும் எதிராக முன்வைக்கப்படவுள்ள அவநம்பிக்கை பிரேரணை மற்றும் குற்றப் பிரேரணை என்பனவற்றை அடுத்த நாடாளுமன்ற வாரத்தில் சபாநாயகரிடம் கையளிக்க எதிர்கட்சி முன்னதாக திட்டமிட்டிருந்தது.
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் பிரேரணையில் கையொப்பமிடும் நடவடிக்கைகள முன்னெடுக்கப்படுகின்றன.
அதில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கையொப்பமிட்டுள்ளார்.
இதேவேளை, அரசாங்கத்திற்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அதன் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும் கையொப்பமிட்டுள்ளனர்.