Developed by - Tamilosai
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதி மற்றும் நிதியமைச்சர் ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளர் Changyong Rhee மற்றும் நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஸ, நிதியமைச்சின் செயலாளர் SR ஆட்டிகல ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கையின் பொருளாதார மீளாய்வு தொடர்பில் கருத்துக்களை பரிமாறிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.