தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சர்வதேச சமூகம் இலங்கையின் நிலைப்பாட்டை சிரமமின்றி ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கை காணப்படுகிறது-ஜீ.எல்.பீரிஸ்

0 318

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இதன்போது இலங்கை தொடர்பிலான எழுத்துமூல அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் சமர்பிக்கவுள்ளார்.

இந்த அறிக்கை மார்ச் 3 ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கையின் பிரதியை வெளிவிவகார அமைச்சுக்கு வழங்குவதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் உறுதியளித்துள்ளதாக அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஐந்து நாட்களுக்குள் இலங்கை பதில் அளிக்க வேண்டும் என்றும், உரிய பதில்கள் கவனமாக தொகுக்கப்பட்டு பெப்ரவரி 19 ஆம் திகதி ஜெனிவாவுக்கு அனுப்பப்படும் என்றும் பீரிஸ் கூறினார்.

49 ஆவது கூட்டத்தொடரின்போது சர்வதேச சமூகம் இலங்கையின் நிலைப்பாட்டை சிரமமின்றி ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கை காணப்படுவதாகவும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.