தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சர்வதேச கறுப்புப் பட்டியலில் ராஜபக்ஷ அரசாங்கம்

0 145

ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு கைகொடுத்த சீனாவே தற்போது அவர்களைக் கன்னத்தில் அடிக்க ஆரம்பித்துள்ளது.

சீன அரசாங்கத்தால் மக்கள் வங்கி கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதன் ஊடாக சர்வதேசத்தால் ராஜபக்ஷ அரசாங்கத்தையும் கறுப்புப் பட்டியலில் சேர்ப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை தெளிவாகிறது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:

இந்த அரசாங்கம் ஆட்சியைப் பொறுப்பேற்கும் போது சீனாவின் ஒத்துழைப்பு ராஜபக்ஷக்களுக்கு கிடைக்கப் பெற்றது. அந்த ஒத்துழைப்பிற்கான நன்றியுணர்வை இப்போது அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அதற்கமைய நாட்டின் வெவ்வேறு முக்கிய இடங்களை சீனாவிற்கு வழங்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் தரத்தில் குறைவான உரத்தை கொண்ட கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது. இதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெற முன்னரே இவர்கள் கடன் அனுமதிப்பத்திரத்தையும் வெளியிட்டுள்ளனர்.

அதற்கமைய இந்த விவகாரத்தில் மறைமுக கொடுக்கல் வாங்கல் காணப்படுகின்றமை தெளிவாகிறது.

தரத்தில் குறைந்த உரம் இறக்குமதி செய்யப்படக் கூடாதெனத் தெரிவித்து பாரிய எதிர்ப்புக்கள் வெளிப்பட்டுள்ளமையால் பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன.

இதன் காரணமாக சீன அரசாங்கம் இந்தக் கடன் அனுமதிப் பத்திரம் வெளியிடப்பட்டுள்ள மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலில் இணைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் மூலம் சீனாவால் அல்லது சர்வதேசத்தால் ராஜபக்ஷ அரசாங்கத்தையும் கறுப்புப் பட்டியலில் சேர்ப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை தெளிவாகிறது.

கைகொடுத்த சீனாவே ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு கன்னத்தில் அடிக்க ஆரம்பித்துள்ளது என  அவர் மேலும்  தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.