தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சர்வதேச கடன் மறுசீரமைப்பிற்க்கு 2 நிறுவனங்கள் தெரிவு

0 48

மக்கள் துன்பப்படுகின்ற நிலையில் எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட நெருக்கடிகளால் அரசாங்கம் பெற்றுக்கொண்ட சர்வதேச கடனை மறுசீரமைப்பதற்கான செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நிதி ஆலோசனை சேவைகளுக்காக உலகின் முன்னணி ஆலோசனை நிறுவனங்கள் இரண்டை தெரிவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

மேலும் அவர் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கையில் சர்வதேச யோசனைகள் தொடர்பில் ஆராய்ந்து, அதற்கான புள்ளிகள் வழங்கப்பட்டு, பிரான்ஸின் Lazard என்ற நிறுவனமே கடன் மறுசீரமைப்பிற்கான ஆலோசனை நிறுவனமாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

5.6 மில்லியன் டொலரை ஆலோசனை சேவைகளுக்கான கட்டணமாக செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சட்ட ஆலோசனைகளை வழங்க Clifford Chance நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.