தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சர்வதேசப் பொறிக்குள் சிக்கப்போகும் சிறிலங்கா

0 259

இலங்கையில் போர் நடைபெற்ற காலத்தில் கருப்பு பணத்தை பயன்படுத்தி வடகொரியாவிடம் இருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்ததாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஊடகங்களிடம் கூறிய தகவல் குறித்து சர்வதேச அமைப்புகள் மற்றும் வெளிநாட்டு தூதரகங்கள் கவனம் செலுத்தி வருவதாக தெரியவருகிறது.

சர்வதேச யுத்த நியமங்கள் மற்றும் மனித உரிமைகள் விழுமியங்கள் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைக்குரிய விடயங்களின் அடிப்படையில், நிதியமைச்சரின் தகவல் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் நிதியமைச்சர் வெளியிட்டுள்ள இந்த தகவல் தொடர்பாக முறையான விசாரணைகளை நடத்த குறித்து சர்வதேச அமைப்புகள் மற்றும் வெளிநாட்டு தூதரகங்கள் சர்வதேச மட்டத்தில் கலந்துரையாடி வருவதாக கூறப்படுகிறது.

நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இந்த விடயத்தை பெரிதாக பொருட்படுத்தாமல் வெளியிட்டிருப்பதை காண முடிந்தாலும் சர்வதேசத்தில் அது பாரதூரமான அவதானிப்பு உள்ளாகியுள்ளது என இலங்கையில் செயற்படும் மனித உரிமை தொடர்பான சட்டத்தரணி ஒருவர் கூறியுள்ளார்.

இது எதிர்வரும் காலத்தில் நடக்கும் ஜெனிவா மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் கட்டாயம் சர்ச்சைக்குரிய தொனிப்பொருளாக மாறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் பசில் ராஜபக்சவின் இந்த தகவல் தொடர்பில் கண்டிப்பாக சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட நிறுவனங்கள் கவனம் செலுத்தும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார விஞ்ஞான விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற எதிர்பார்த்திருக்கும் சந்தர்ப்பத்தில் இப்படியான தகவலை வெளியிட்டுள்ளதன் மூலம் அதனுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  

Leave A Reply

Your email address will not be published.