தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சரும பொலிவை மெருகூட்டும் பப்பாளி பழம்

0 37

பப்பாளி பழம் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்ப்பதோடு சரும பொலிவையும் (Papaya skin beauty) மெருகூட்டும். முகத்தில் படியும் அழுக்கையும், எண்ணெய் பிசுபிசுப்பு தன்மையையும் நீக்கும். சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்கி மென்மையையும், பொலிவையும் பெற்று தரும். இயற்கை ஃபேஷியலுக்கு பழங்களை பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்துக்கும் சருமத்துக்கும் எந்தவிதமான பாதிப்புகளையும் உண்டாக்குவதில்லை.

* முகப்பரு உள்ளவர்கள், பப்பாளிக்காயின் நறுக்கிய உட்பகுதித் துண்டுகளை மென்மையாக முகத்தில் தேய்க்க வேண்டும். இது முகப்பருக்களைப் போக்கி, முகச் சுருக்கங்களையும் நீக்கி, பொலிவு கூட்டும் பப்பாளிப்பழம்.

* காலில் பித்த வெடிப்பா? கவலையே வேண்டாம்! பப்பாளி காயின் பாலை எடுத்து அதில் தேய்க்கவும். சில நாட்களிலேயே பாதவெடிப்பு காணாமல் போய்விடும்.

* மெல்லிடை வேண்டுமா? இதற்கும் பப்பாளி பெஸ்ட் சாய்ஸ்தான்! உடல் எடை குறைய பப்பாளிக்காயினை கூட்டாக செய்து தொடர்ந்து சாப்பிட்டுவர நீங்களும் ஆகலாம் ஸ்லிம்

பப்பாளி அலர்ஜி இருப்பவர்கள் கவனமாக பயன்படுத்த வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.