Developed by - Tamilosai
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அரச செலவீனங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒரு வருட காலம் சம்பளமின்றி பணியாற்ற அமைச்சரவை அமைச்சர்கள் முடிவு எடுத்துள்ளனர். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் அமைச்சரவையில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பிரதமர் அலுவலகத்தின் செலவீனங்களையும் அரைவாசியாக குறைக்குமாறு பிரதமர் ரணில் விக்கரமசிங்க பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.