Developed by - Tamilosai
நாடளாவிய ரீதியில் சமையல் எரிவாயுவின் விநியோகம் , நாளை முதல் வழமை போன்று இடம்பெறும் என்று லிட்றோ ஹாஸ் நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்ஹ தெரிவித்துள்ளார்.
தற்போது மேல் மாகாணத்தில் சமையல் எரிவாயுவின் விநியோகம் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், எரிவாயு உற்பத்தி நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
எரிவாயு உற்பத்தி நடவடிக்கைகள் 4 நாட்கள் தடைப்பட்டதன் காரணமாகவே சமையல் எரிவாயுவுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.